வில் ஸ்மித்தின் புதிய இசை ஆல்பம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (56). இண்டிபண்டன்ஸ் டே, மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Mar 17, 2025 - 11:10
 0  4
வில் ஸ்மித்தின் புதிய இசை ஆல்பம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (56). இண்டிபண்டன்ஸ் டே, மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இசைக்கலைஞருமான இவர், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். முதலில் சிலருடன் இணைந்து பாடல்களை வெளியிட்டு வந்த அவர், 1997-ம் ஆண்டு தனியாக ‘பிக் வில்லி ஸ்டைல்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது அப்போது வரவேற்பைப் பெற்றது. கடைசியாக, 2005-ம் ஆண்டில், ‘லாஸ்ட் அன்ட் பவுன்ட்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.

இப்போது 20 வருடங்களுக்குப் பிறகு ‘பேஸ்டு ஆன் எ ட்ரூ ஸ்டோரி’ என்ற தனது புதிய இசை ஆல்பத்தை அறிவித்துள்ளார். இது வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் 14 பாடல்கள் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow