விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

May 8, 2025 - 18:35
 0  4
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

விருச்சிகம்: எவ்வித பேதமும் இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவிக்கும் நீங்கள், பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். ராஜதந்திரத்துடன் செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்து தீர்வு காண்பீர்கள். இனம் காண இயலாதபடி இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரபல யோகாதிபதி எட்டில் சென்றும் மறைவதால், எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏலச்சீட்டு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

திடீர் பயணங்கள் இருக்கும். அதேபோல், வீண் பழிகள், அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பதிகள் பிரச்சினைக்குள் மூன்றாம் நபர் தலை யீட்டை அனுமதிக்க வேண்டாம். பழைய பகையை நினைத்துக் கொண்டு உறவினர்களிடம் பேசாமல் இருக்க வேண்டாம். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குல தெய்வம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது நன்மை தரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow