விம்பிள்டன் டென்னிஸில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்றது.

Jul 13, 2025 - 10:05
 0  4
விம்பிள்டன் டென்னிஸில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்!

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow