‘விஜய் 69’ படத்தில் நான் நடிக்கவில்லை: சிவராஜ் குமார் தகவல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Nov 19, 2024 - 18:20
 0  6
‘விஜய் 69’ படத்தில் நான் நடிக்கவில்லை: சிவராஜ் குமார் தகவல்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ‘விஜய் 69’ படத்தில் தன்னை நடிக்க வைக்க அணுகியதாக சிவராஜ் குமார் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். விஜய் - சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தை ஆட்கொண்டது. ஆனால், தற்போது அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். இப்போது அளித்த பேட்டியில், சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஹெச்.வினோத் தன்னை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை எனவும், விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow