‘புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும்: நஸ்ரியா கருத்து
“புஷ்பா 2’ படத்தில் ஃபஹத் ஃபாசிலின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்” என நடிகையும், அவரது மனைவியுமான நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

சென்னை: “புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என நடிகையும், ஃபஹத் மனைவியுமான நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் அல்லு அர்ஜுன் - ஃபஹத் ஃபாசில் இருவருக்குமான மோதல் தான் கதையாக இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபஹத் ஃபாசில், 2-ம் பாகத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘புஷ்பா 2’ குறித்து ஃபஹத் மனைவி நஸ்ரியா கூறுகையில், “தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார் ஃபஹத். ‘புஷ்பா’ முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் அவருக்கான திரை நேரம் அதிகம். இது முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?