வரலாறு படைத்த உஸ்மான் கவாஜா - இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸி. வீரர்!

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் உலகின் தலைசிறந்த சமகால வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செல்லப்பிள்ளையாக அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாறு படைத்தார். 

Jan 30, 2025 - 16:50
 0  4
வரலாறு படைத்த உஸ்மான் கவாஜா - இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸி. வீரர்!

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் உலகின் தலைசிறந்த சமகால வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செல்லப்பிள்ளையாக, அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா, இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாறு படைத்தார்.

உஸ்மான் கவாஜா கால்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தன் இரட்டைச் சதத்தை எடுத்து முடித்து 232 ரன்களில் பிரபத் ஜெயசூரியாவிடம் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும். உஸ்மான் கவாஜா தன் 200-வது ரன்னை 290-வது பந்தில் சிங்கிள் மூலம் எடுத்த போது இலங்கையில் முதல் முதலாக இரட்டைச் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow