நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி சாம்பியன்
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி, கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதிகபட்சமாக முகமது வஹித் 18 கோல்கள் செலுத்தினார்.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தெலங்கானா 24-22 என்ற கணக்கில் ஹரியானாவை தோற்கடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார்.
What's Your Reaction?