வனத்தில் மரங்களை வெட்டியதாக யஷ்ஷின் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்கு

படப்பிடிப்புக்காக நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிய புகாரில் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Nov 13, 2024 - 18:50
 0  6
வனத்தில் மரங்களை வெட்டியதாக யஷ்ஷின் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்கு

பெங்களூரு: படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிய புகாரில் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘டாக்சிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவின் பீன்யா - ஜலஹள்ளி வனப்பகுதியில் பிரமாண்ட செட் அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான மரங்களை ‘டாக்சிக்’ படக்குழுவினர் வெட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow