வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.21-ல் தொடக்கம்: 27-ல் சூரசம்ஹார உற்சவம்
வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.21-ல் தொடங்குகிறது. மேலும், 27-ம் தேதி சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது.

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.21-ல் தொடங்குகிறது. மேலும், 27-ம் தேதி சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது.
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது. அந்த வகையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மகா கந்த சஷ்டி விழா வரும் 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்குகிறது.
What's Your Reaction?