வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

வங்கதேச விமானப்படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

Jul 22, 2025 - 02:50
 0  5
வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேச விமானப்படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7பிஜிஐ (சீன தயாரிப்பு) ரக பயிற்சி விமானம் டாக்கா நகரில் இருந்து நேற்று மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், உட்டாரா என்ற இடத்தில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி வளாகத்தில் விழுந்த அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow