லோகா: வரைகலை நாவல் வடிவில் ஒரு ஜிலீர் திரை அனுபவம்!
பெண் சாகச கதாபாத்திரங்களின் கதைகளை கையாள்வதில் து நமக்கு 90 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் இருப்பதால், இப்படத்தை ஒரு மீள் முயற்சியாகவும் திரையரங்க அனுபவத்தின் மைல்கல்லாகவும் கண்டிப்பாக கொண்டாடி வரவேற்கலாம்.

முதன்முதலில், பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம் ஒன்று வெளிவந்தது இந்தியாவில். அதுவும், மேற்கத்திய உலகில் சூப்பர்மேன் , பேட்மேன் போன்ற சாகசக் கதாபாத்திரங்கள் காகிதத்தில் படைக்கப்படுவதற்கு முன்னரே. இதை உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம்.1935இல் வெளிவந்த முதல் பெண் சாகச நாயகி இந்தி திரைப்படம் "ஹண்டர்வாலி" தான் அது. சாகச நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட படங்கள் கொஞ்ச காலம் நீடித்தாலும், பின்னர் வழக்கொழிந்து போயின. தற்காலத்தில், அபூர்வமாக வெளிவரும் பெண் சாகச நாயகி படங்களில் மிகவும் முக்கியமான மலையாளத் திரைப்படம் தான் "லூகா : சாப்டர் ஒன் : சந்திரா".
தற்கால பெங்களூர் நகரத்தில் சந்திரா என்கிற புதிய பெண் வந்து சேர்கிறார். யார் பார்வையிலும் அதிகம் படாமல் ஓர் இரவு நேர உணவு விடுதியில், ஒரு சின்ன வேலையும் பார்த்துக்கொள்கிறார். அவளின் எதிர் குடியிருப்பில் சன்னி மற்றும் வேணு என இரண்டு வாலிபர்கள் வசிக்கிறார்கள். அதில், சந்திராவின் மேல் கொண்ட ஈர்ப்பால் சன்னி அவளை பின்தொடர்கிறான். அதே ஊரில், காவல்துறையின் துணையோடு மனித உறுப்புகள் கடத்தல் நடக்கிறது. இதனிடையே , வேணுவின் துப்பறிதலில், சந்திராவை பற்றிய மர்மமான, அதுவரையில் சொல்லப்படாத ரகசிய விஷயங்கள் வெளிவர, இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதே கதை.
What's Your Reaction?