லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ எப்படித்தான் உருவானது? - விடை தெரியா கேள்விகளும் காரணங்களும்
பசிபிக் பாலிசேட்ஸை உருவாக்கும், உயரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அலங்கார வீடுகள் நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விரும்பும் மலையேறுபவர்கள் அங்கு பசிபிக் பெருங்கடலின் நீரைத் தெளிவாக காணலாம். பள்ளத்தாக்கின் பச்சைப் போர்த்திய புதர்கள் இன்று சாம்பல் நிறமாவும் கண்ணுக்கெட்டிய தூரம் சாம்பல் மேடுகளாக உள்ளன

லாஸ் ஏஞ்சல்ஸ்: மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் டெமெஸ்கல் கன்யானின் மலையேறும் பாதை உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பசிபிக் பாலிசேட்ஸை உருவாக்கும், உயரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், அலங்கார வீடுகள் நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விரும்பும் மலையேறுபவர்கள் அங்கு பசிபிக் பெருங்கடலின் நீரைத் தெளிவாக காணலாம்.
பள்ளத்தாக்கின் பச்சைப் போர்த்திய புதர்கள் இன்று சாம்பலாக மாறியுள்ளன. கண்ணுக்கெட்டிய தூரம் சாம்பல் மேடுகளாக உள்ளது. மலையேறும் பாதைகளை தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கும் போலீஸாரின் மஞ்சள்நிற ரிப்பன்கள் தடுத்து நிற்கின்றன. அந்தப் பகுதிகளில் பல வீடுகளை அழித்த பெருங்காட்டுத் தீ அங்கிருந்து தோன்றியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். நகரின் வடக்கே பல பகுதிகளிலும் இதுபோன்ற காட்சிகளையே காணமுடிகிறது. புலனாய்வாளர்கள் மலைகள் மற்றும் பாதைகளில் உள்ள பாறைகள், பாட்டில்கள், கேன்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். என்றாலும், இந்தக் காட்டுத் தீயின் துவக்கம் இன்னும் பிடிபடவில்லை.
What's Your Reaction?