லார்ட்ஸ் டெஸ்ட்டில் பும்ரா அபாரம்: இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்: ENG vs IND
இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா.

லண்டன்: இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது.
What's Your Reaction?