‘லப்பர் பந்து’ தினேஷின் இரட்டைப் பாய்ச்சல்! | இயக்குநரின் குரல்
அறிமுகப்படத்தின் பெயரால் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டவர், தற்போது ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால், ‘கெத்து’ தினேஷ் என கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்.

அறிமுகப்படத்தின் பெயரால் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்டவர், தற்போது ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியால், ‘கெத்து’ தினேஷ் என கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘கருப்பு பல்சர்’ என்கிற படத்தில் முதல் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கும் முரளி கிருஷ்.எஸ், இயக்குநர் எம்.ராஜே ஷிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
என்ன கதை? இரண்டு தினேஷ்களும் அப்பா - மகனா? - கதை மதுரையில் தொடங்கி சென்னையில் முடிகிறது. மதுரையில் வசிக்கும் கருப்பு என்கிற தினேஷ், ஜல்லிக்கட்டில் பிரபலமான மாடுபிடி வீரர். இன்னொரு தினேஷ் சென்னை யில் வசிக்கிறார். புதிதாகத் திருமணமாக விருக்கும் தனது நண்பனுக்காக ஜல்லிக்கட்டு ஒன்றில் காளையை அடக்கி, பல்சர் பைக்கை பரிசாகப் பெற்றுக் கொடுக்கிறார் கருப்பு.
What's Your Reaction?