“ரோஹித் சர்மா என்ன ஆல் டைம் கிரேட்டா?” - ‘நீக்க’ விளக்கத்தை விளாசிய மஞ்சுரேக்கர்
“சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தைரியமாக அறிவிக்க வேண்டியதுதானே, அதில் ஏன் இத்தனை மர்மம், இத்தனை திரிபுகள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார். ரோஹித் சர்மா இந்தத் தொடரில் எடுத்த ஸ்கோர்கள் 3, 6, 10, 3 மற்றும் 9. மொத்தம் 31 ரன்கள். சராசரி 6.2 ரன்கள். இதற்கு மேலும் என்ன அத்தாட்சி வேண்டும் அவர் அணியில் நீடிக்கக் கூடாது என்பதற்கு?
What's Your Reaction?