‘இந்தியாவில் 5%-க்கும் கீழாக குறைந்த தீவிர வறுமை விகிதம்’ - எஸ்பிஐ ஆய்வில் தகவல்
இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவி வந்த தீவிர வறுமை இப்போது மிகவும் குறைவாக 5% க்கும் கீழே குறைந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவி வந்த தீவிர வறுமை இப்போது மிகவும் குறைவாக 5%-க்கும் கீழே குறைந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வறுமை குறித்த பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி முடிவுகள்: அரசாங்கத்தின் நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பு (The Consumption Expenditure Survey) FY24-ல் கிராமப்புற வறுமையில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டறிந்துள்ளது. 2012 நிதி ஆண்டில் 25.7% ஆக இருந்த கிராமப்புற வறுமை, 2023 நிதி ஆண்டில் 7.2% ஆகச் சரிந்து, 2024 நிதி ஆண்டில் 4.86% ஆக குறைந்துள்ளது. இதேபோல், 2012 நிதி ஆண்டில் 13.12% ஆக இருந்த நகர்ப்புற வறுமை, 2023 நிதி ஆண்டில் 4.6% ஆகவும், 2024-ல் 4.09% ஆகவும் குறைந்துள்ளது.
What's Your Reaction?