'ரைட்' விமர்சனம்: ஒரு காவல் நிலையத்தின் கதி!

திரைக்கதைக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டது விஜய்சேதுபதி நடித்த ‘மகராஜா’. தற்போது ‘ரைட்’ அந்தப் படத்தின் ‘டெம்போ’வை தனது திரைக்கதையாலும் அதனுள் இருக்கும் சமுக அக்கறையாலும் முந்திச் செல்ல முயன்றுள்ளது.

Sep 28, 2025 - 13:45
 0  3
'ரைட்' விமர்சனம்: ஒரு காவல் நிலையத்தின் கதி!

காவல் நிலையத்தைக் கதைக் களமாகக் கொண்ட திரைப்படங்களில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘மகாராஜா’ அதன் ‘நான் - லீனியர்’ திரைக்கதைக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டது. தற்போது ‘ரைட்’ முந்தைய படத்தின் ‘டெம்போ’வை தனது திரைக்கதையாலும் அதனுள் இருக்கும் சமுக அக்கறையாலும் முந்திச் செல்ல முயன்றுள்ளது.

சென்னைக்கு வருகை தரும் பிரதமரின் பாதுகாப்புப் பணிக்கான குழுவில், கோவளம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரகுராம் (நட்ராஜ்) அனுப்பப்படுகிறார். அந்த நேரத்தில், அவரது காவல் நிலையத்தை அங்குள்ள ஒரு லேப்டாப் மூலம் கட்டுப்படுத்துகிறான் ஒரு மர்ம மனிதன். லேப்டாப் திரையில் தோன்றும் அவன், ‘காவல் நிலையத்தின் பல இடங்களில் ‘டைம் பாம்’ வகை வெடிகுண்டைப் பொருத்தியிருக்கிறேன். எனது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் குண்டுவெடிப்புக்குப் பலியாக வேண்டியிருக்கும். யாரேனும் வெளியேற முயன்றால், ரிமோட் வழியாகக் குண்டுகளை வரிசையாக வெடிக்க வைப்பேன்’ என்று மிரட்டுகிறான். மிரட்டலுக்குப் பயப்படாமல் வெளியேற முயன்ற ஒரு விசாரணைக் கைதியை ஒரு குண்டை வெடிக்க வைத்துத் தடுத்தும் நிறுத்துகிறான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow