ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை: வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நடப்பாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த பிப்ரவரியில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட பணவியல் கொள்கையில் ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
What's Your Reaction?