ரூ.700 கோடி நஷ்டம்: கேரள தயாரிப்பாளர் சங்க அறிவிப்பால் அதிர்ச்சி
2024-ம் ஆண்டில் ரூ.700 கோடி நஷ்டம் என கேரள தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளது திரையுலகம்

2024-ம் ஆண்டில் ரூ.700 கோடி நஷ்டம் என கேரள தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளது திரையுலகம்.
2024-ம் ஆண்டு மலையாள திரையுலகம்தான் நல்ல படங்கள் கொடுத்தது என்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘வாழ’ என பல படங்கள் இந்தியளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன. இவற்றில் சில படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமும் விளம்பரப்படுத்தினார்கள். இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம்தான் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?