ரூ.64,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் விமானம் வாங்க ஒப்புதல்
26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி: 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை. ஆனால், இந்த விமானங்களுக்கான சர்வீஸில் கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகள் எழுந்தன. கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுக்கு மேல் ஆகும்.
What's Your Reaction?