ரூ.5,000 மதிப்பிலான பைக்கை ஒப்படைத்தால் ரூ.10,000 சன்மானம் - மதுரை போஸ்டர் நெகிழ்ச்சிக் கதை
மதுரையில் தாயின் நினைவாக பாசத்தோடு பராமரித்து, ஓட்டி வந்த பைக் திருடு போன நிலையில், அதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே என்றாலும், கண்டுபிடித்து தருபவருக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் தருவதாக உரிமையாளரான மாநகராட்சி ஊழியர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

மதுரை: மதுரையில் தாயின் நினைவாக பாசத்தோடு பராமரித்து, ஓட்டி வந்த பைக் திருடு போன நிலையில், அதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே என்றாலும், கண்டுபிடித்து தருபவருக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் தருவதாக உரிமையாளரான மாநகராட்சி ஊழியர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
மதுரை காளவாசல் பொன்மேனி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). மாநகராட்சி ஊழியர். கார்த்திகேயனின் தாயார் கருப்பாயி சீட்டு கட்டிய பணத்தில் 2002-ல் மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். இதனால் தாய்க்கு நிகராக பைக்கையும் பாசத்தோடு பராமரித்தார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு கரோனா காலத்தில் கருப்பாயி உயிரிழந்தார்.
What's Your Reaction?