ரூ.3,884 கோடிக்கு பிரம்மோஸ் வாங்குகிறது இந்தோனேசியா

இந்தியாவிடம் இருந்து ரூ. 3,884 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தோனேசியா வாங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது.

Jan 28, 2025 - 02:25
 0  4
ரூ.3,884 கோடிக்கு பிரம்மோஸ் வாங்குகிறது இந்தோனேசியா

புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து ரூ. 3,884 கோடி மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தோனேசியா வாங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, வியட்நாம் உட்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow