ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன்: ரிசர்வ் வங்கி தகவல்
ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இதுகுறித்து பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, தங்க நகைகளின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இது வாடிக்கையாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன.
What's Your Reaction?