ரூ.100 கோடியை கடந்த ‘விடாமுயற்சி’யின் வசூல் நிலவரம் என்ன?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 6 நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.118 கோடி வசூலை எட்டியுள்ளது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலுக்குப் பிறகு, கடந்த இரு தினங்களாக சற்று ‘நிதான’மாகவே வசூல் செய்து வருகிறது. 

Feb 12, 2025 - 16:45
 0  4
ரூ.100 கோடியை கடந்த ‘விடாமுயற்சி’யின் வசூல் நிலவரம் என்ன?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 6 நாட்களில், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.118 கோடி வசூலை எட்டியுள்ளது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலுக்குப் பிறகு, கடந்த இரு தினங்களாக சற்று ‘நிதான’மாகவே வசூல் செய்து வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தன்மைகளைத் தாண்டிய புதுவிதமான திரை அனுபவம் தந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow