ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ அடுத்த ஆண்டு அக்டோபர் ரிலீஸ்!

ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Nov 18, 2024 - 19:35
 0  5
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ அடுத்த ஆண்டு அக்டோபர் ரிலீஸ்!

பெங்களூரு: ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் படம் ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’. இதன் அறிமுக டீசர் மட்டுமே இதுவரை வெளியாகி இருக்கிறது. யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இதுவரை வெளியாகவில்லை. தற்போது ‘காந்தாரா எ லெஜெண்ட்: சாப்டர் 1’ படம் 2025-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே தேதியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow