ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினாரா? - படக்குழு விளக்கம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா’. இந்தப் படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா’. இந்தப் படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்துக்கு முந்தைய கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஷிவமோகா மாவட்டத்தின் மாணி நீர்த்தேக்கத்தில் நடந்தது.
ரிஷப் ஷெட்டியுடன் 30 பேர் கொண்ட குழு படப்பிடிப்புக்காகச் சென்றபோது, படகு கவிழ்ந்தது என்றும் ஆழமற்ற பகுதியில் கவிழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியதாகவும் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர்.
What's Your Reaction?