ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு!
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார்.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
What's Your Reaction?