ரிஷபம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!
ரிஷப ராசி அன்பர்களே, 2025-ம் ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம். உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்படும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள்.
சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.
What's Your Reaction?