ராஷ்மிகா மந்தனா காயம்: ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு ரத்து

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

Jan 11, 2025 - 01:10
 0  3
ராஷ்மிகா மந்தனா காயம்: ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு ரத்து

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் ஜிம்மில், உடற்பயிற்சியில் ஈடுபட்ட ராஷ்மிகா மந்தனா எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனால் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ராஷ்மிகா தரப்பில், “அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வரும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow