ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா - தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி  

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது

Nov 5, 2025 - 08:50
 0  11
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா - தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி  

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 291 ரன்​களும், விதர்பா 501 ரன்​களும் குவித்​தன. 210 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழ்​நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 89 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 233 ரன்​கள் எடுத்​திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

ஆதிஷ் 46, விமல் குமார் 9, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 14, ஆந்த்ரே சித்​தார்த் 11, ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பாபா இந்​திரஜித் 189 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும், கேப்​டன் சாய் கிஷோர் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​ற​தால் விதர்பா அணிக்கு 3 புள்​ளி​கள் கிடைத்​தது. தமிழ்​நாடு அணிக்கு ஒரு புள்ளி வழங்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow