ட்ரீசா - காயத்ரி ஜோடி வெற்றி

வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது.

Dec 13, 2024 - 08:20
 0  3
ட்ரீசா - காயத்ரி ஜோடி வெற்றி

ஹாங்சோ: வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி தங்களது 2-வது ஆட்டத்தில் மலேசியாவின் பியர்லி டான், தினா முரளிதரன் ஜோடியுடன் மோதியது. 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா - காயத்ரி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் 20-22, 22-20, 21-14 என்ற செட்கணக்கில் போராடி முதல் நிலை ஜோடியான சீனாவின் லியு ஷெங் ஷு, டான் நிங் ஜோடியிடம் தோல்வி கண்டிருந்தது. ட்ரீசா - காயத்ரி ஜோடி தங்களது கடைசி ஆட்டத்தில் ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிஹாரு ஷிடா ஜோடியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய ஜோடி அரை இறுதிக்கு முன்னேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow