ரஜினியின் பிறந்த நாளான டிச.12-ல் ‘தளபதி’ ரீரிலீஸ் 

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது. 

Nov 15, 2024 - 22:45
 0  4
ரஜினியின் பிறந்த நாளான டிச.12-ல் ‘தளபதி’ ரீரிலீஸ் 

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படம் ‘தளபதி’. ஷோபனா, அரவிந்த் சாமி, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் ‘க்ளாசிக்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 12-ம் தேதி ‘தளபதி’ படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow