‘யோகாவால் நேர்மறை எண்ணங்கள் வளரும்’ - அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்து
தற்போதைய சூழலில் நீர், நிலம், காற்றைப்போல் மனிதர்களின் மனதும் மாசடைந்து வருகிறது. மாசடைந்த மனதை யோகா மூலம் தூய்மைப்படுத்தலாம். இன்று யோகாவில் பட்டம் பெறுவோர் சமுதாயம் பயனடையும் வகையில் யோகாவை கற்பிக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தெரிவித்தார்.

மதுரை: தற்போதைய சூழலில் நீர், நிலம், காற்றைப்போல் மனிதர்களின் மனதும் மாசடைந்து வருகிறது. மாசடைந்த மனதை யோகா மூலம் தூய்மைப்படுத்தலாம். இன்று யோகாவில் பட்டம் பெறுவோர் சமுதாயம் பயனடையும் வகையில் யோகாவை கற்பிக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி தெரிவித்தார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 15-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதற்கு அதன் செயலாளர் ஆர்.நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் ஆர்.தேவதாஸ் முன்னிலை வகித்தார். கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் வரவேற்றார்.
What's Your Reaction?