யாழ்ப்பாண பின்னணியில் உருவாகும் ‘அந்தோனி’!

‘கயல்’ வின்சன்ட், டி.ஜே.பானு நடிக்கும் படம், ‘அந்தோனி’. யாழ்ப்பாண கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர். இவர்களுடன் நிழல்கள் ரவி, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர். 

Apr 13, 2025 - 12:05
 0  3

ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஓசை பிலிம்சின் கலை வளரி சகஇரமணா - சுகா, விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரொடக்‌ஷன்சின் சிரீஸ் கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow