மைக் டைசன் Vs ஜேக் பால் குத்துச்சண்டை போட்டியை நேரலையில் ஒளிபரப்பும் நெட்ஃபிளிக்ஸ்

முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியை நேரலை ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் தளம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Nov 15, 2024 - 15:20
 0  5
மைக் டைசன் Vs ஜேக் பால் குத்துச்சண்டை போட்டியை நேரலையில் ஒளிபரப்பும் நெட்ஃபிளிக்ஸ்

நியூயார்க்: முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியை நேரலை ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் தளம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

58 வயதான மைக் டைசன் மற்றும் 27 வயதான ஜேக் பால் இடையிலான இந்தப் போட்டி தலைமுறைகள் கடந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற இறுதி ஃபேஸ்-ஆஃப் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பாலை வலது கன்னத்தின் பக்கம் டைசன் அறைந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow