மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்ரல் 3 - 9

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் , சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சுபபலன் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்திசாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் இருந்து வந்த தொய்வுநிலை மாறும்.
What's Your Reaction?