கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.27 - மார்ச் 5
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.27 - மார்ச் 5

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன், ராகு- லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என வலம் வருகிறார்கள்
பலன்: இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும்.
What's Your Reaction?