மேஷம் முதல் மீனம் வரை: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025

புத்தாண்டு பலன்கள் 2025 - உங்கள் ராசிக்கு எப்படி?

Dec 29, 2024 - 13:55
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025

மேஷம்: இந்தாண்டு பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டபடி, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு உண்டாகும். வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - உழைப்பு, தன்னம்பிக்கை..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow