மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 19 - 25

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 19 - 25

Jun 19, 2025 - 19:15
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 19 - 25

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: ஆனி 07 (22.06.2025) அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தனாதிபதி சுக்கிரன் ராசியில் மிக பலமாக சஞ்சாரிக்கிறார். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow