மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம்

May 9, 2025 - 19:40
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

வரும் 14.05.2025 புதன்கிழமை, இரவு 11 மணி 20 நிமிடத்தில் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். நிகழும் விசுவாவசு வருடம், சித்திரை மாதம் 31-ம் தேதி கிருஷ்ண பட்ச துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம், சிவம் நாமயோகத்தில், கரசை நாமகரணத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் குரு பகவான் குடி பெயர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக ஸ்திர வீடான சுக்கிரனின் ரிஷப ராசியில் அமர்ந்து சில படிப்பினைகளை சொல்லிக் கொடுத்த குரு பகவான், இப்போது உபய வீடான புதனின் மிதுன ராசியில் 14.05.2025 முதல் 1.06.2026 வரை அமர்ந்து அரசாட்சி செய்வார்.

மேஷம்: குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow