மேலூர் நாகம்மாள் கோயில் ஆடி உற்சவ விழாவில் 10,000 பக்தர்கள் நேர்த்திக்கடன்!
மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு இன்று 10,000 பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு இன்று 10,000 பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பஜார் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நாகம்மாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி தற்போது 61-ம் ஆண்டு ஆடி உற்சவ விழாவையொட்டி, 15 நாட்களுக்கு முன் பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டும் நிகழ்வுடன் தொடங்கியது. ஆடி உற்சவ விழாவின் முதல் நாளான இன்று காலையில் சக்தி கரகம் எடுத்தனர்.
What's Your Reaction?