மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி - ஜுலை 6 வரை கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அரசு அழைப்பு
மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து வரும் ஜுலை 6-ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை: மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து வரும் ஜுலை 6-ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதை அனல், நீர், காற்றாலை மற்றும் எரிவாயு உள்ளிட்ட மின்னுற்பத்தி மூலம் மின்வாரியம் பூர்த்தி செய்து வருகிறது. இதில், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் கட்டாயம் இருக்க வேண்டும்.
What's Your Reaction?