மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: ஜெய்ஸ்வால் ஆறுதல்!
மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 184 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா.

மெல்பர்ன்: மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2-1 என அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. மூன்றாவது போட்டி டிரா ஆனது.
What's Your Reaction?