மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன? - மனம் திறக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

May 3, 2025 - 07:55
 0  3
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன? - மனம் திறக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

ரியான் ரிக்கெல்டன் 38 பந்துகளில், 61 ரன்களும் ரோஹித் சர்மா 36 பந்துகளில், 53 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களும் விளாசி மிரட்டினர். 218 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow