முட்டைகள் பலவிதம்! | பறப்பதுவே 04

பறவைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடியவை. ஒரு குஞ்சு உருவாவதற்குத் தேவையான சத்துகள் அனைத்தும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு, உறுதியான மேலோட்டினால் மூடப்பட்டு முட்டை உருவாகிறது.

Nov 11, 2024 - 15:48
 0  3
முட்டைகள் பலவிதம்! | பறப்பதுவே 04

பறவைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடியவை. ஒரு குஞ்சு உருவாவதற்குத் தேவையான சத்துகள் அனைத்தும் ஓரிடத்தில் வைக்கப்பட்டு, உறுதியான மேலோட்டினால் மூடப்பட்டு முட்டை உருவாகிறது. ஒவ்வொரு வகைப் பறவைக்கும் முட்டையின் அளவும் வண்ணமும் வேறுபடும்.

பொதுவாக ஒரு பறவையின் எடையில் 1 முதல் 3 சதவீதம் வரை முட்டையின் எடை இருக்கும். மிகப் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் முட்டை 1.4 கிலோ முதல் 2.3 கிலோ வரை எடை இருக்கும். வளர்ந்த நெருப்புக்கோழியின் எடை 70 முதல் 140 கிலோவாக இருக்கும். 1.5 கிலோ எடை இருக்கும் வாத்து, 70 கிராம் எடையுள்ள முட்டையை இடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow