மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

May 8, 2025 - 20:55
 0  4
மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

மீனம்: குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாத நீங்கள், கள்ளம் கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். இதுவரை 3-ல் இருந்தபடி பல விஷயங் களையும் முடக்கி வைத்திருந்தார் குருபகவான். இப்போது அவர், நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைகளிலும் புதிய தொடர்புகளும், அவற்றால் ஆதாயங்களும் உண்டாகும். சில சவால்களை போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குள் அவ்வப்போது இனம் புரியாத வெறுமை வந்து போகும்.

சில நேரங்களில் வாழ்வில் சலிப்பு ஏற்படலாம். செலவுகளும் தொடர்ந்து வரும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சேமிப்புகள் கரையும். நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நல்லவராக நடந்து கொண்டால் போதும். மற்றவர்கள் உங்களைப் பாராட்ட வேண்டுமென நினைக்காதீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீடு - மனை வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow