மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அடுத்த 4 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அடுத்த 4 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நேற்று காலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து நேற்று மாலை பவுனுக்கு 1,120 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.10,640-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.92,856-க்கு விற்கப்பட்டது.
What's Your Reaction?