‘மார்கோ 2’ படத்தை கைவிட்டார் உன்னி முகுந்தன்

மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Jun 17, 2025 - 08:15
 0  3
‘மார்கோ 2’ படத்தை கைவிட்டார் உன்னி முகுந்தன்

மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரித்து, நடித்த மலையாளப் படமான ‘மார்கோ’ கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஹனீப் அதேனி இயக்கிய இந்தப் படம் ரூ.120 கோடியை தாண்டி வசூலித்தது. மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இருந்தும் ‘மார்கோ’ படத்தின் 2-வது பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க இருப்பதாக உன்னி முகுந்தன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘மார்கோ 2’ அப்டேட் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “மார்கோ’ படங்களைத் தொடரும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். அந்தப் படத்தைச் சுற்றி ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் படத்தை விட சிறந்த படமொன்றைத் தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow