மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு

மாரி செல்வராஜ் இயக்கி வந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மாரி செல்வராஜ்.

Feb 18, 2025 - 14:30
 0  5
மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு

மாரி செல்வராஜ் இயக்கி வந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow