மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துன்வா, ஜில்ஜிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் இஸ்லாமாபாத், ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி உட்பட பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.ஜீலம், சிந்து, சட்லஜ், ஜில்ஜிட், ஸ்வாட் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருக்கிறது.
What's Your Reaction?